பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

Must Read

கற்பக விருட்சம் என்ற போற்றப்படும் ஒரே மரம் இந்த பனை மரம் தான்.

நமது நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் மர வகைகளில் இந்த‌ பனைமரம் முதலிடத்தில் உள்ள‍து. இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்க‍க்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்லாரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மாருந்தாக வும் செயல்படக் கூடியது.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு. அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டு விட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம்பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்துவந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.

ம‌லக் கழிவை வெளியேற்ற‍ இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள்…. வெயிலில் காய வைத்த‍ பனங்கிழங்கை (ப‌ச்சையாக) எடுத்து, தேவையானளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து அம்மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள‍ அல்ல‍து உடலிலிருந்து வெளியேரமறுக்கும் மலத்தை இளகவைத்து, எளிதான மலத்தை வெளியேற்றி அதாவது மலச்சிக்கலை தீர்த்து பூரண சுகத்தை அளிக்கும். மேலும் உடலுக்கு எதிப்புச் சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும் என்கின்றன‌ சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.

உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.

உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது.

பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Leave a Reply

Latest News

இந்த 5 உணவுகளை தினமும் தட்டில் வைத்து வந்தால், உங்கள் தலைமுடி முடி கொட்றது நிக்குமாம்.. முடியும் நீண்டு வளருமாம்..!

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இந்த 5 வைட்டமின்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தகைய வைட்டமின்கள் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

More Articles Like This

Discover more from Devi Media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading