Friday, May 17, 2024

அருள்மிகு வைரவர் திருக்கோயில் – வைரவன்பட்டி

சுவாமி: வளரொளிநாதர்(வைரவன்).

அம்பாள்: வடிவுடையம்பாள்.

தீர்த்தம்: வைரவர் தீர்த்தம்.

தலவிருட்சம்: ஏர், அளிஞ்சி.

தலச்சிறப்பு:

இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது.  நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில்களுள் ஒன்றாகும்.

திருத்தல வரலாறு:

சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற  அகந்தையுடன் இருந்தார்.  ஒரு முறை பார்வதி தேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய  மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார்.  பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து  விட்டார்.  பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து  கூறினாள்.  எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை  கிள்ளி எறிந்தார்.  இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.

நடைதிறப்பு:  காலை 6.00 மணி முதல்  மதியம் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.45 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள்: சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு.

அருகிலுள்ள நகரம்: திருப்பத்தூர்.

கோயில் முகவரி: அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோவில்,

வைரவன்பட்டி – 630 215, சிவகங்கை மாவட்டம்.

தொலைபேசி எண்: 04577- 264 237.

Related Articles

Leave a Reply

Latest Articles

Discover more from Devi Media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading