உண்மையான பட்டர்ஸ்காட்சை நீங்கள் கடைசியாக எப்போது சுவைத்தீர்கள்? சாக்லேட் மற்றும் காபி போன்ற உணவு உலகில் பட்டர்ஸ்காட்சைத் தவிர அனைத்தும் உருவாகி வருகின்றன. நாம் அனைவரும் சிறுவயதில் பட்டர்ஸ்காட்ச் புட்டிங், சாஸ், சிரப், கிரீம் பை, மிட்டாய்கள் மற்றும் பல பட்டர்ஸ்காட்ச் உணவுகளை அனுபவித்திருக்கிறோம்.
தேவையான பொருள்கள்:
பால் – 1/2 லிட்டர்
சீனி – 1 கிலோ
மைதா மாவு – 200 கிராம்
கொக்கோ பவுடர் – 1 மேஜைக்கரண்டி
வெண்ணெய் -200 கிராம்
செய்முறை:
கொக்கோ பவுடருடன் மைதாவைக் கலந்து கொள்ளவும் இக்கலவையுடன் சிறிதளவு பாலைக் கலந்து கட்டி விழாதவாறு கொள்ளவும்.
பின்பு அடுப்பில் அடிகனத்த சட்டியை வைத்து அதில் மேற்கண்ட கலவையுடன் மீதிப்பாலை வெண்ணெய், சீனி ஆகியவற்றைக் கலந்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி வைத்து கொள்ளவும் அடுப்பில் உள்ள கலவை பக்கங்களில் ஒட்டாமல் பக்குவமாக வந்ததும் நெய் தடவிய தட்டில் தட்டவும் சிறிது ஆறியதும் இஷ்ட்டப்பட்ட வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
இதையும் செய்யலாமே!: குழந்தைகளுக்காக கமர்கட் நம்ம வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!!