சாப்படும் அறை (dining hall):
மேற்குப் பகுதியில் அமைய வேண்டும். சாப்பிடுபவர்கள் வடக்கு, கிழக்கு, மேற்கு நோக்கிச் சாப்பிடுமாறு அமைக்க வேண்டும்.
சமையலறை (kitchen): தென்கிழக்கு அக்னி மூலையில் அமைக்க வேண்டும். மிகவும் சிறப்பானது. முடியவில்லை என்றால் வாயு மூலையில் அமைக்கலாம். ஸ்டோர் ரூம்: தென்மேற்கிலும், தெற்கிலும் இருக்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டி (fridge) போன்றவை மேற்கில் இருக்க வேண்டும். ஹோட்டல் தலைவாசல் ஈசான்யத்திலிம் உச்ச திசைகளிலும் இருக்க வேண்டும். மிகவும் முக்கியம். ஈசான்ய மூலையில் குறைந்தது 3’ x 3’ காலியிடமாவது விட வேண்டும். அந்த மூலையினைப் பாயன்படுத்தக் கூடாது.
ஜெனரேட்டர், கரண்ட் சுவிட்சுகள் போன்றவை அக்னி மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் வரக் கூடாது.
ஹோட்டல்களில் டைனிங்ஹால் அமைக்குபோது, வடக்கிலும், கிழக்கிலும் நடைபாதை இருக்குமாறு அமைத்து மேற்கிலும், தென்புறத்திலும் டைனிங் டேபிள்கள் போட்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாற வேண்டும். விற்பனையும் அதிகரிக்கும். நாளுக்கு நாள் வியாபார முன்னேற்றமும் ஏற்படும்.