வாஸ்து படி மாடி படிக்கட்டு

தென்மேற்க்கு பகுதி மிகச் சிறந்த இடம். தென்கிழக்கு, வடமேற்க்கு பகுதிகளிலும் அமைக்கலாம். மாடியில் தென்மேல் உயரமான அறை கட்டினால், வடக்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

மாடியில் அறைகள் ஏதும் கட்டாமல், முழுவதும் மொட்டை மாடியாக விடின், தென்மேற்க்கு பகுதியில் மட்டுமே படிகள் அமைக்க வேண்டும்.

படிகள் கூடுமானவரை இடமிருந்து வலமாக ஏறும் முறையில் (clockwise) இருத்தல் சிறந்தது.

நான்கு திசைகளை நோக்கியும் ஏறுமாறு படிக்கட்டு இருக்கலாம்.

ஒரு திசை மட்டும் நோக்கியே ஏறுவதாயின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் ஏறுமாறு படிக்கட்டு இருக்க வேண்டும்.

வீட்டின் உள்ள படிக்கட்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் (stair cases).

நிலவறைக்கும், மாடிக்கும் வெவ்மேறு படிக்கட்டுகள் இருக்க வேண்டும்.

மாடியில் உள்ள அறையின் உச்சப் பகுதியில் உள்ள வாயிலில் நுழைதல் வேண்டும். கிழக்குப் பகுதியில் உள்ள (வடக்குப் பாதியில்) வாயில் வழியாக நுழைதல் மிக நல்லது.

ஒற்றைப் படையாகவும், மூன்றால் வகுத்தால் மீதம் இரண்டு வருவதாகவும் இருக்க வேண்டு.

திரும்போது ஒரே திசை நோக்கி ஏறின், 12 படிகள் ஆனவுடன் நிற்குமிடம் (landing space) அமைக்க வேண்டும்.

வெளிர் நிறங்கள் ஏற்றன.

இதையும் படிக்கலாமே!: வற்றாத செல்வம் பெற வீடு கட்டும்முன் கவனிக்கவேண்டிய வாஸ்து முறைகள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply