வாஸ்து பித்தளை ஆமை

வாஸ்து இந்தியாவில் தோன்றிய பல அற்புத சாஸ்திரங்களில் ஒன்று. முழுக்க அதிர்வலைகள் மற்றும் எனர்ஜிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலை.

நமது எண்ணங்களை அதிர்வலையாக மாற்றி செயல்படுத்தும் ஊக்க சக்தியாக இது செயல்படுகிறது. அப்படி சில விஷயங்கள் வாஸ்துப்படி செய்யக் கூடாது, செய்ய வேண்டும் என பல விதிமுறைகளியக் கொண்டது. அதில் ஒன்றுதான் புனித ஆமை.

ஆமை புகுந்தவீடு நன்றாக இருக்காது என்பதற்கு அர்த்தம் இந்த ஆமை கிடையாது. அவை கல்லாமை, இருளாமை, தீண்டாமை போன்றவைகள்.

ஆமை விஷ்ணுவின் அவதாரமாக இந்து தர்மத்தில் குறிப்பிடப்படுகிறது. அதுபோல் சீனாவிலும் ஆமை உருவம் புனிதமாக வணங்கப்படுகிறது. புனித ஆமை சிலையை வீட்டில் வைப்பதால் நல்லது நடக்கும் எனக் கூறுகிறார்கள்.

அதுவும் வீட்டிக் வைக்கப்படும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்குகிறது. எந்த இடத்தில் வைத்தால் என்ன மாதிரியான நன்மைகள் எனப் பார்க்கலாம்.

வாசல் கதவு அருகில்:

வாசல் கதவு அருகில் வைத்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைந்து அமைதி நிலவும். எதிர்மறை சக்தி தடுக்கப்படும்.

கிழக்கு:

வீட்டின் கிழக்குத் திசையில் வைத்தால், குடும்பத்தில் உள்ளவருக்கு தேக ஆரோக்கியம் மேம்படும்.

கிரிஸ்டல் ஆமை:

புனித ஆமை க்ரிஸ்டலில் வாங்கி வீட்டிலும், அலுவலகத்திலும் வைத்தால், செல்வம் பெருகும்.

மண் ஆமை:

மண்ணினால் செய்த ஆமையை வீட்டில் வைத்தால், வீட்டில் யாராவாது நோய்வாய்ப்பட்டிருந்தால் விரைவில் குணமாகும்.

பித்தளை ஆமை:

வீட்டில் சிலருக்கு வேலையே கிடைக்காமல் சலித்துப் போயிருப்பார்கள். அப்படியே கிடைத்தாலும் திருப்தியில்லாமல் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் பித்தளை ஆமையை வாங்கி வைத்தால் விரைவில் வேலை கிடைக்கும்.

உலோக ஆமை:

புதிதாக வியாபாரம் தொடங்கும்போது, ஆரம்பிக்கும் முதல் நாளில் பூஜை செய்வதுண்டு. அந்த பூஜையின்போது உலோகத்தால் ஆன குறிப்பாக வெள்ளியால் ஆன ஆமையையும் வைத்து பூஜை செய்தால், வியாபரத்தில் நஷ்டம் உண்டாகாமல் மென்மேலும் விருத்தி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே!: கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply