வாஸ்து முறைப்படி படுக்கை அறை

வாஸ்து படி வீட்டில் படுக்கையறையை எப்படி அமைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும்.

அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் – மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

* ஒரு வீட்டில் கணவன் – மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.

* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.

* படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.

* மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.

* படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply