கல்யாணம் அல்லது ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கும் இனிப்பு பூந்தி ரெசிபி. எளிமையான பொருட்கள் இன்னும் சாப்பிடக்கூடிய கற்பூரம், ரோஜா வாசனையுடன் மிகவும் சுவையாக, தெய்வீக வாசனை!
தேவையான பொருள்கள்:
மைதா மாவு – 1/2 லிட்டர்
உளுந்த மாவு – 200 மி.லி.
ரீபைண்ட் ஆயில் – சுடுவதற்கு
கலர் பொடிகள் – 4 அல்லது 5 பிரியப்பட்ட கலர் பொடிகள்
பச்சரிசி மாவு – 200 மி.லி.
சீனி – 1 கிலோ
சோடா உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
மூன்று மாவையும் கலந்து சோடா உப்பு சேர்த்து தோசை மாவு போல் தண்ணிர் ஊற்றி கரைத்து கொள்ளவும். சீனியை பிசுபிசுப்பாக பாகு தயாரித்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்திருக்கும் மாவை ஐந்து பாத்திரத்தில் பிரித்து வைத்து ஒரு தவிர மற்ற நான்கு பாத்திரத்திலிருக்கும் மாவிற்கும் வெவ்வேறு கலர் கலந்து தனித்தனியாக மேலே பூந்திக்கு சொன்னது போல் சுட்டு சீனிப்பாகில் போட்டு எடுத்து எல்லாப் பூந்திகளையும் கலந்து உபயோகிக்கவும்.
இந்த பூந்தி கலர், கலாராக பார்ப்பதற்கு அழகாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பாயாசத்திற்கு போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.