பருப்பு கேக் செய்வது எப்படி?

பண்டிகை இனிப்புகளில், முந்திரி கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பால் இனிப்பு ஆகும். ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு முந்திரி கேக் ஆகும். பேக்கரியில் விற்கப்படும் வைர வடிவ முந்திரி கேக்கை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இங்கு எளிதாக செய்யக்கூடிய முந்திரி கேக் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்:

முந்திரி பருப்பு -100 கிராம்
சீனி – 300 கிராம்
நெய்  – 300 கிராம்
பால் – 100 மி.லி
ஏலப்பொடி – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

முந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது கடாய் வைத்து, அரை குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.

அதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும். கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.

நுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.

கவனிக்க:

கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும். அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.

இதையும் செய்யலாமே!: குழந்தைகளுக்கு சேமியா கேசரி செய்து கொடுங்கள்!!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply