அதிக சத்துக்கள் நிறைந்த மற்றும் மலிவாக கிடைக்கக் கூடியதுமான முருங்கைக் கீரையில் எப்படி பொரியல் தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.
முருங்கைக் கீரை பொரியல் செய்யத் தேவையான பொருட்கள் :
- முருங்கைக் கீரை – 1 கட்டு,
- நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்,
- காய்ந்த மிளகாய் – 5, கடுகு – ½ டீ ஸ்பூன்,
- மஞ்சள்தூள் – ½ டீ ஸ்பூன்,
- கல் உப்பு – தேவையான அளவு,
- தேங்காய் துருவல் – ½ கப்,
- நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
செய்முறை:
முதலில் கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

கீரை வெந்ததும் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான சத்தான முருங்கைக் கீரை பொரியல் ரெடி.
இதையும் படிக்கலாமே!: சுவையான அகத்தி கீரை பொரியல்.
இப்போது அமேசானில் வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்: Click Here…
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.