பூமிநாதர் கோயில் (வாஸ்து கோவில்) செவலூர், புதுக்கோட்டை மாவட்டம்.

மூலவர் ; பூமிநாதர்

அன்னை;ஆரணவல்லி அம்மன்

தீர்த்தம் ; பிருத்வி தீர்த்தம்

அமைவிடம் ; புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ளது.

தல சிறப்பு :

பூகம்ப அபாயம், நிலத்தகராறுகள், தடைப்பட்டுள்ள காரியங்கள்தொழிலில் தடை கட்டிட வேலைகளில் பாதிப்பு, வீடு கட்டும்போது வேம்பு ஆல் அரசு போன்ற மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம் நீங்கவும் நாகப்புற்றுகளைஅழித்த தோஷம் நீங்கவும் வியாபாரத்தில் நஷ்டம் போன்ற துன்பங்களை அனுபவிப்போர் இங்கு வந்து பூமிநாதருக்குப் பூஜை செய்யலாம்.

இதுதவிர முதுகுவலி, மூலம், பிருஷ்டநோய்கள் போன்றவற்றுக்கும் இங்கே விசேஷ பூஜைகள் நடக்கிறது.

தல வரலாறு

மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு வேண்டும் என விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்ள, விரைவிலேயே சொந்த வீடு அமையும் என்பதும் ஐதிகம்.

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்துள்ளது. முதல் யுகமான கிருத யுகத்தில் பூமாதேவி எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தைத் தாங்கும் சக்தியை அதிகரித்துத் தரவேண்டும் என்பதே அவளின் கோரிக்கை.

அவள் முன் தோன்றிய சிவன் திரேதாயுகம்,துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியை தருகிறேன் ஆனால் கலியுகத்தில் இப்புவியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது உன் பக்தர்கள் உன்னைப் பூஜிப்பதன் மூலமாகவே அந்த வலிமை உனக்குக் கிட்டும் எனக்கூறி மறைந்தார்.

இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடி அலைந்த பூமாதேவி பல சுயம்பு லிங்க தலங்களுக்கு சென்று இறைவனை வணங்கினாள் அவ்வாறு பூமாதேவி வணங்கிய தலமே இந்த செவலூர் பூமிநாதர். இத்தலத்து லிங்கம் 16 பட்டைகளைக் கொண்டது.

பூமாதேவி இவரைப் பூஜித்தபோது ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு எனப் பலவித காப்புகளைச் சார்த்தியதால் இந்தப் பட்டை உருவானதாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் ஒவ்வொரு வாஸ்து தினத்தன்றும் பூஜைகள் நடக்கிறது. பூஜித்த செங்கலை புது வீடு கட்டும் பூமி பூஜையில் வைத்து பூஜித்தால் புது வீடு வேலைகள் தங்குதடையின்றி நிறைவேறும் என்பதற்கு இங்கு வரும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.

பூமிநாதர் கோயில் (வாஸ்து கோவில்) செவலூர், புதுக்கோட்டை மாவட்டம்.

வாஸ்து பூஜை

கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாகக் காட்சி தருகிறார். பதினாறு செல்வங்கள் பெறவும், வீடு மனைகளில் யோகம் உண்டாகவும் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வாஸ்து நாளன்றும், இக்கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

சுவாமிக்கு 11 விதமான அபிஷேகங்களும் நடத்தப்படும். வாஸ்து தினத்தை ஒட்டி, காலையில் சுவாமி சந்நிதி முன்மண்டபத்தில் விசேஷ ஹோமங்கள் தொடங்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.