பால் அல்வா செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான சத்து நிறைந்த பால் அல்வா வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பால் – 4 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 1 கப்,
ரவை – அரை கப்,
சீவிய பாதாம் – தேவையான அளவு,
மஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை :

சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, ரவை அரை கப் நெய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து, கொள்ளவும்.

இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி… கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம்.

சூப்பரான மில்க் அல்வா ரெடி.

குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply