பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி

சாதாரணமாகவே வெஜிடேபிள் சேர்த்துக்கொள்வது உடம்புக்கு நல்லது. குழந்தைகளுக்கு சாதத்தில் சேர்த்து கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான வெஜிடேபிள் கிச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
நெய் – 1-2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 4-6
கிராம்பு – 4
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நீரில் ஒருமுறை கழுவி, இரண்டையும் நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் மிளகு, கிராம்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை குறைந்தது 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி
பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை மீண்டு கழுவி சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும்.

பின் அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

ஒரு பேனில் நெய் விட்டு, அதில் பெருங்காயம், சீரகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போது இதில் நறுக்கிய கேரட், முட்டைகோஸை சேர்த்து வதக்குங்க. பிறகு பச்சை பட்டாணியும் சேர்த்து தொடர்ந்து வதக்குங்க.

இப்போது இந்த கலவைல நறுக்கிய குடை மிளகாயையும் சேர்த்து வதக்குங்க. காய்கள் எல்லாம் நல்லா வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கோங்க.

பிறகு பச்சை மிளகாயையும் சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு சிகப்பு மிளகாய்த் தூள் ஆகிய பொருட்களை போட்டு எல்லா பொருட்களை நல்லா கலந்துவிட்டு மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வேக விடுங்க.

இப்போது ஏற்கனவே குக்கரில் வேகவைத்து வைச்சிருக்குற அரிசி பருப்பு கலவையை குக்கர் ஆறியதும் திறந்து, அதில் நாம தயாரிச்சு வெச்சிருக்கிற காய்கறி மசாலா கலவையை சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க.

சூடாக இருக்கும்போதே மேலாக 1 ஸ்பூன் நெய்யை விட்டு கலந்து சூடாக பரிமாறுங்க.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply