வாங்க வேண்டிய மனைகள்

1. கோவிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் மனை இருக்க வேண்டும்.

2. கோவிலின் வாசலுக்கும், மனைக்கும் இடையில் 80 அடிக்குக் குறையாத அகலத்தில் தெரு இருந்தால், கோவில் வாசலுக்கு எதிரில் வீடு கட்டலாம்.

3. மனைக்கு அருகில் வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் ஆறு, வாய்க்கால்கள் போன்றன இருக்கலாம். இவைகளில் நீர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் பாய்வது சிறந்தது.

4. குன்று, மேடு, பாறை ஆகியவைகட்கு அருகில் மனை தவிர்க்கவியலாததாயின் அவைகட்கு வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே வீடு கட்டலாம்.

5. மனையை அடுத்துத் தெற்கிலும், மேற்கிலும், உயர்ந்த கட்டிடங்களோ, மரங்களோ இருக்கலாம்.

6. மனை மிகப் பெரிதாயின், ஆல், அரசு, மா, வேம்பு போன்ற மரங்கள் மனையில் இருக்கலாம். மரத்தின் நிழல் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டின் மீது விழக்கூடாது.

7. காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் கதிரொளி வீட்டுல் பரவ வேண்டும்.

8. வாகனங்கள் செல்லக் கூடிய அகலமான பாதை இருந்தால் எதிரெதிர் வாயில் அமைக்கலாம்.

9. மின்நிலையம் மனைக்கு அருகில் தென் கிழக்குத் திசையில் இருந்தல் சிறந்தது.

10. மனையின் வடகிழக்குத் திசையில் தந்திக் கம்பம் இருக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply