எதிமனையால் ஏற்படும் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர் மனையில் (விட்டில்) உள்ள சிலரால் கெடுபலன்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இதையும் மனைக் குத்துக்களில் ஒன்றாகச் சேர்த்தே கருதவேண்டும்.

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர் மனையில் (வீட்டில்) எட்டாவதாகப் பிறந்த பெண் இருந்தால் இத்தோஷம் ஏற்படும்.

அதுபோல சிம்ம லகனத்தில் பிறந்தவர் இருப்பினும் இத்தோஷம் ஏற்படும். எனவேதான் இத்தோஷத்தை ‘எதிர் மனையில் உள்ளவர்களால் உண்டாகும் குத்தி’ என்று பலராலும் கூறப்படுகிண்றது.

இவ்விரண்டு வகையாலும் குத்து ஏற்பட்டு தோஷம் பெற்ற மனை விருத்தியாகாது. அம்மனையில் வீடு கட்டி வாசம் செய்பவர்களும் விருத்தியாகமட்டார்கள் என்பது அனுபவ உண்மை. எதிர் வீட்டிலிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி எதிர்வீட்டில்  எட்டாவதாகப் பிறந்த பெண் இருக்கிறாளா என்பதையும், சிம்ம லக்னக்காரர்கள் இருக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிம்ம லக்னக்காரரால் உண்டாகும் தோஷம் தனுசு லக்னத்தை உடையவருக்கு எந்தவிதம் கெடுதியையும் செய்யாது மற்ற லக்னக்காருக்குத்தான் கெடுதலைச் செய்யும்.

இந்தத் தோஷத்தினால் விளையும் கெடுதல் அதிகம் என்பதால் இதைக் கருத்தில் கொண்டு மனையைத் தேர்ந்தெடுப்பதோ வீட்டைக் கட்டுவதோ சாலச் சிறந்ததாகும்.

திறந்தவெளிக் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் திறந்த வெளியாக இருந்தால் அதனால் ஏற்படும் தோஷத்தை ‘திறந்த வெளிக்குத்து’ என்று வழங்குவது பரபு. இக்குத்து உள்ள மனையைத் தஏந்தெடுப்பதோ அல்லது வீட்டைக் கட்டுவதோ உகந்ததல்ல. இதனால் உறவினர்களிடமிருந்து விரோதத்தையும், பணப் பற்றாக்குறையையும்தான் அனுபவிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் அவ்வளவும் வந்தவழி தெரியாமல் போய்விடும்.

கிணற்றுக் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் கிணறு இருந்தால் அதனால் உண்டாகும் தோஷத்தைக் ‘கிணற்றுக் குத்து’என்று கூறுவார்கள். அதுவும் குறிப்பாக வாயிலுக்கு எதிராக வந்தால்தான் கடுமையான கிணற்றுக் குத்து தோஷம் ஏற்படும். இந்தத் தோஷம் இருந்தால் குடும்பத்தில் நலிவும், வறுமையான வாழ்க்கையும் உண்டாகும்.எனவே இத்தோஷ்ம் பெற்ர மனையில் வீட்டைக் கட்டுதலோ வாசம் செய்தலோ நன்மையைத் தராது.

குளக் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் குளம் இருந்து அதனால் உண்டாகும் தோஷத்தைக் ‘ குளக்குத்து’ என்று பெயரிட்டழைப்பது வழக்கம். இந்தத் தோஷம் பெற்ற மனையில் வீடுகட்டுவதோ அல்லது வாசம் செய்வதோ நன்மையைத் தராது. முன்னர்க் கிணற்றுக் குத்திற்குக் கூறியதுபோல வறுமையான வாழ்க்கைக் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உறவினராலும் நண்பர்களாலும் பொருளழிவு உண்டாகும். ஆகவே இத்தோஷத்தை அனுசரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

வாய்க்கால் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் வாய்க்கால் இருந்து அதனால் ஏற்படும் தோஷத்தை ‘வாய்க்கால் குத்து’ எனக் குறிப்பிடுவது வழ்க்கம். இத்தோஷம் பெற்ற மனையில் வீடு கட்டுவதோ அல்லது வாசம் செய்தலோ கூடாது. இவ்வாய்க்கால் குத்தினால் வீட்டிற்கே அதாவது கட்டடத்திற்கே கேடு விளையும் என்பது சாஸ்திர விதி.

ஆற்றுக் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் ஆறு ஒடினால் அந்த ஆற்றினால் ஏற்படும் தோஷத்தை ‘ஆற்றுக் குத்து’ என்பர். இந்த ஆற்றுக் குத்து பெற்றுள்ள மனையை எல்லாவற்றிற்கும் தவிர்க்க வேண்டும். அதுவும் வீடு கட்டுவத்ற்குக் கொஞ்சம்கூட உதாவது.முன்னர் வாய்க்கால் குத்துக்குக் கூறிய பலன்களே இதற்கும் பொருந்தும்.

வயல் குத்து

மனைக்கோ அல்லது வீட்டிற்கோ எதிர்ப்புறத்தில் வயல்வெளி இருந்து அதனால் உண்டாகும் தோஷத்தை’வயல் குத்து’ என்று கூறுவர்.இவ்வயல் குத்து பெற்ற மனையைத் தேர்ந்தெடுப்பதோ அல்லது மனையில் வீட்டைக் கட்டுவதோ, அல்லது வீட்டைக் கட்டி வாசம் செய்வதோ உகந்ததல்ல. குடும்பத்தில் சுகமோ வளமோ உண்டாகாது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply