வாஸ்து முறைப்படி தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள் ஃபேக்டரிகள் மற்றும் ஆபீஸ் போன்ற அனைத்திற்கும் வாஸ்து உள்ளது. கோடிக் கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்குகிறோம். கட்டடங்கள் கட்டுகிறோம். நூற்றுக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெரிய தொழில் கூடங்கள், தொழிற்சாலைகள் வாஸ்து பலம் இல்லாத காரணத்தால் கோடிக் கணக்கான ரூபாய் நஷ்டங்கள் உண்டாகின்றன.

உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றது. தொழிலாளர் பிரச்சனைகளும், உற்பத்திக் குறையும் ஏற்படுகின்றன. அதற்கான முக்கிய காரணங்களை இப்போது பார்ப்போம்.

காரணங்கள்: மெயின் வாசல் கன்னி மூலையிலும், அக்னி மூலை கிழக்கிலும், வடக்கு வாயு மூலையிலும் இருப்பது. கட்டடங்கள் கிழக்கிலும், வடக்கிலும் அடைத்து அமைந்திருப்பது. தெற்கிலும், மேற்கிலும், கிணறு மற்றும் கீழ்த் தொட்டிகள் கட்டுவது. வடகிழக்கு மூலையை அடைத்து விடுவது அல்லது சில அறைகளைக் கட்டிவிடுவது. வாயு மூலையில் முக்கிய கட்டடம் கட்டுவது.

தொழிற்சாலைகள், ஃபேக்டரிகள் அமைக்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை : முக்கிய மெஷனரிகளூம், பளுவான பொருட்களும் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். ஈசான்யத்தில் கூடவே கூடாது. மெயின் கேட் வடகிழக்கு கிழக்கிலோ அமைக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டி, கீழ்நிலை அமைப்புகள் வடக்கிலும், கிழக்கிலும், வடகிழக்கிலும் அமைக்க வேண்டும்.

தொழிற்சாலை அமைக்கும் விதம் :

உற்பத்தி அறை (அக்னி சம்பந்தப்பட்டவை): தென்கிழக்கு மூலை ஸ்டோர் ரூம், மூலப்பொருட்கள்: தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

டெலிபோன்: அறையின் கிழக்கு அல்லது வடக்குப் பாகத்திலிருக்க வேண்டும்.

மாநாட்டு அறை (conference room): வாயு மூலையில் அமைக்க வேண்டும். வடக்கிலும், மேற்கிலும் அமைக்கலாம்.
ஆர் & டி பகுதி : மேற்குத் திசையில் அமைக்கச் சிறந்தது. வடமேற்குத் திசையிலும், தென்மேற்கிலும் அமைக்கலாம்.

விற்பனைப் பகுதி (sales dept.): வடமேற்குப் பகுதியே சிறந்தது. மேற்கிலும், வடக்கிலும் அமைக்கலாம்.

அலுவலகம் (Controlling Office ): கிழக்கிலும், வடக்கிலும், ஈசான்ய மூலையை அடைக்காமல் ஈசான்யத்திலும் அமைக்கலாம்.

வரவேற்பு அறை (waiting room): வடகிழக்கிலும், கிழக்குப் பாகத்திலும் அமைக்க வேண்டும்.

முதலாளி அறை : தென்மேற்குப் பகுதியில் சற்று உயரமாக அமைக்க வேண்டும். முடியவில்லையென்றால் கிழக்கிலும், வடக்கிலும் அமைக்கலாம்.

ஏ. சி. பிளாண்ட்: அறையின் வடக்கிலும், வடகிழக்கிலும் அமைக்க வேண்டும்.

டீசல் அல்லது எண்ணெய் சேமிப்பு (storage ): தெற்கிலும், தென்மேற்கிலும் அமைக்க வேண்டும்.

பணியாளர்கள் குவார்ட்டர்ஸ்: ஃபேக்டரியின் தென்கிழக்குப் பகுதியிலும், வடமேற்கிலும், தென்மேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

ஜெனரேட்டர்: தென்கிழக்கு அக்னி மூலையில் அல்லது கிழக்குப் பகுதியில் வைக்க வேண்டும்.

விற்பனைக்குத் தயாரான பொருட்கள் (finished goods): வடமேற்குத் திசை அறைகளிலும். மேற்குத் திசையிலும் வைக்க வேண்டும்.

பாய்லர்: தென்கிழக்குப் பகுதியிலும், கிழக்கிலும் அமைக்க வேண்டும்.

நீர் சுத்திகரிக்கும் யூனிட்: மேற்கிலும், வடமேற்கிலும் அமைக்க வேண்டும்.

மூலப் பொருட்கள்: தெற்கிலும், தென்மேற்கு மற்றும் மேற்கிலும் ஸ்டாக் செய்ய வேண்டும்.

மருத்துவ வசதி: தென்மேற்கிலும், மேற்கிலும் அமைக்க வேண்டும்.

விளம்பரப் பலகைகள்: தென்மேற்கு வாயுமூலையே சிறந்தது.

கேஷ் கெளண்டர்கள் (cash counter): வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பகுதியில் அமைக்க வேண்டும்.

விற்பனைக் கெளண்டர்கள்: வடக்கு, கிழக்கு, வடமேற்குப் பகுதியில் அமைக்க வேண்டும். விற்பனையாளர் வடமேற்கைப் பார்த்து அமர்தல் பலன் அளிக்கும்.

டெலிவரி கெளண்டர்கள்: வடமேற்கிலும், மேற்கு மற்றும் வடக்கிலும் அமைக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply