அன்று அமாவாசையல்லவா! எங்கும் மையிருட்டு போர்த்தியிருந்தது. குறித்த வேளையில் ராஜகுருவும் அரண்மனைப் புரோகிதர்களும் உள்ளூர நடுங்கிக் கொண்டே சென்றார்கள். அங்கிருந்த ஆலமரத்தடியில் கூடினார்கள்.
எங்கும் ஒரே இருட்டு. ஆழ்ந்த நிசப்தம் வேறு அங்கு ஆட்கொண்டிருந்தது. தூரத்தில் எங்கேயோ நரிகள் ஊளையிட்டன ஆந்தைகள் அலறின
ராஜகுருவுக்கு திக்கென்றது. மார்பு அடித்துக் கொன்டது என்ன செய்வது! மன்னனுடைய உத்தரவு அல்லவா! அதை மறுத்தலிக்க முடியுமா! இந்த தெனாலிராமன் நம்மை நன்றாகப் பழிவாங்குகிறான் என்று முணுமுணுத்து கொண்டார்.
உடனே அக்கினி வளர்த்து மந்திரம் ஜெயிக்கத் தொடங்கினார்கள். அந்த மங்கிய ஒளியில் உறக்கமின்றி அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சீக்கிரமாக வீடு திரும்ப, அவசர அவசரமாக மந்திரம் ஜபித்தார்கள்.
கடைசியாக அனைத்தையும் முடித்து ‘ஓ தெனாலிராமன் ஆவியே!” என்று அண்ணாந்து பார்த்து கூப்பிட பொழுது ஹா!’ என்று ஆலமரத்தின் மீதிருந்து அலரும் குரல் கேட்டது.
அதுகேட்டு, அங்கிருந்த அனைவரும் மயிர்க்கூச்செறிந்து அப்படியே ஸ்தம்பித்துப் போனார்கள்.
உடனே ‘என்னையா கூப்பிட்டீகள்?” என்று மரத்தின் மீதிருந்து தொப்பென்று குதித்தான் பிரம்மராட்ஸன். கன்னங்கரேல் என்றும் சிவந்த கண்களுடன் பார்க்கப் பயங்கரமாக இருந்தது அந்த உருவம்.
அதைப் பார்த்ததுதான் தாமதம்! அப்படியே போட்டது போட்டபடியே விடுவிடு விழுந்தடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.வழியில் இரண்டொருவர் விழுந்ததும் உண்டு. பாவம்! பெரும் பீதியில் அவர்கள் என்னதன்ன் செய்வார்கள்.
நேரே அரண்மனைக்கு ஓடிவந்த பிறகுதான் திரும்பிப் பார்த்தார்கள்.அந்த பிரம்மராட்ஸன் அவர்கள் பின்னோடு ஓடி வந்ததாகத்தானே எண்ணியிருந்தார்கள். அந்தப் பயத்திலிருந்து அவர்களால் எளிதில் மீள முடியவில்லை.
பின்னர் பிரம்ம ராட்ஸனைக் காணவில்லை என்ற பிறகுதான், அவர்களால் சற்று மூச்சு விட முடிந்தது. சற்று தைரியமும் ஏற்பட்டது.
நள்ளிரவு வேளை என்று கூட பாராமல், அந்த நேரத்திலேயே, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அரசனை எழுப்பி நடந்ததைச் சொல்லி முறையிட்டார் ராஜகுரு.
“தெனாலிராமன் பிரம்மராட்தனாகிகூட பொல்லதவானக இருப்பான் போலிருக்கே!” என்றார் அரசர்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே அந்த தெனாலிராமன் பிரம்மராட்தனை யார் அடக்குகிறார்களோ, அவர்களுக்கு ஆயிரம்பொன் பரிசளிக்கப்படும்” என்று ஊரெங்கும் பறைசாற்றச் சொல்லிவிட்டார் மன்னர்.
தலைகு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று தன்னை விட்டால் போதும் என்று வீடு திரும்பினார் ராஜகுரு. வீட்டில் அந்த நேரத்திலும் மனைவி விழித்துக் கொண்டுக் கொண்டிருதாள். விசாரித்ததற்கு, ஏதோ பேய் அறைந்தாற்போல் வாசற் கதவு தட்டப்பட்டது. ‘யார் அது?’ என்று கேட்டும் பதிலில்லை. உடனே எனக்குத் தூக்கம் கலைந்து விட்டது. அப்பொழுதிலிருந்து கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு வீட்டில் இல்லையா? அதனால் வேறு எனக்குப் பயம் அதிகமாகிவிட்டது” என்று பெருமூச்சு வீட்டுக் கொண்டே பேசினாள் அவள்!
“ஏர்உ! ஏது இந்த தெனாலிராமன் நம்மை சும்மா விடமாட்டான் போலிருக்கே!” என்று ராஜகுருவும் பயந்துதான் போனார். அதன் பிறகு அவருக்கும் தூக்கம் வரவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வயதானா சந்நியாசி ஒருவர் அரசனைத் தேடிக் கொண்டு போனார்.
“தாங்கள் பறைசாற்றியதைக் கேட்டு வந்திருக்கிறேன். அந்த தெனாலிராமன் பிரம்மராட்தனை என்னால் கட்டுப்படுத்த முடியும்.அதற்கான பரிசை அளிப்பதோடு எனக்கு ஒரு வரமும் அளிக்க வேண்டும்” என்று கெட்டுக் கொண்டார்.
“என்ன வரமோ! அதனால் என் அரசுக்கு தீங்கொன்றும் ஏற்படாதே!” என்றார் அரசர்.
“அதனால் உங்கள் அரசுக்கு ஒருவிதத் தீங்கும் ஏற்படாது. ஒருவேளை அதனால் நன்மை ஏற்பட்டாலும் ஏற்படலாம்” என்றார் அச்சந்நியாசி.
“சரி! அப்படியென்றால், முதலில் அந்த பிரம்ம ராட்தனை அடக்குங்கள். பிறகு அந்த அந்தணனைக் கொல்லும்படி உத்தரவிட்டதனால் எனக்கு பாவம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?அதையும் போக்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதனால் என்ன செலவானாலும் பரவாயில்லை” என்றார் மன்னர்.
“ஓ! அப்படியே செய்யலாமே! உங்கள் பாவத்தைப் போக்குகிறேன். ஏன் தெனாலிராமன் கொல்லப்படாததாகவே செய்கிறேன்” என்றார் சந்நியாசி.
“அப்படியென்றால் தெனாலிராமனை உயிர்பிக்க முடியுமா என்ன? என்று ஆவலுடன் கேடார் அரசர்.
“ஓ! நீங்கள் அப்படி விரும்பினால், அதற்கும் ஏற்பாடு செய்ய என்னால் முடியும்!”
“ஓ! ரொம்ப சந்தோஷனமாகப் போயிற்று! பிழைத்துப் போகிறான். அவனுக்கு உயிர் கொடுத்துவிடுங்கள் அவன் இங்கு இல்லாததால் அரண்மனைல் கலகலப்பே இல்லை!”
“உம், அவனை உயிப்பிப்பதனால் என்ன பிரயோஜனம்! மறுபடியும் விஷமத்தனமான வேடிக்கையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவான் என்றார் ராஜகுரு.
“அப்படியில்லை. அங்கிருந்தால் ஏதேனும் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பான் பாருங்கள். அரண்மனையில் அவனில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது!!” என்றார் மன்னர்.
பக்கத்திலிருந்து மந்திரி”அதற்கான பூஜையெல்லாம் எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள்! எல்லாவற்றையும் அந்த மயானத்து ஆலமரத்தடியிலேயே தயாராக் வைக்கச் சொல்லட்டுமா?” என்றார்.
“அப்படியொன்றும் வேண்டாம்.இங்கேயே இப்பொழுதே அதற்கான பூஜையை ஆரம்பித்து விடலாம்” என்றார் சந்நியாசி.
“இங்கேயேவா! அங்கே ஆலமரத்தடியில் இருக்கும் பிரம்ம ராட்சதனைக் கட்ட இங்கே பூஜையா! அது சரியாக முடியுமா!” என்று சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார், ராஜகுரு.
“எனக்கு எல்லாம் தெரியும் ராஜகுருவே தெனாலிராமனையே உயிரோடு கொண்டு வரப்போகிறேன் என்றால் அதன்பிறகு அங்கு அந்த பிரம்மராட்சதனுக்கு என்ன வேலை. அது மடிய வேண்டியதானே! ஒரே கல்லில் இரண்டு மாங்காய். என் வேலையெல்லாம் அப்படித்தான்” என்று தன் தாடியை உருவி விட்டுக் கொண்டே பேசினார் அவர்.
“ஓ! அப்படியா அது. அதோடு அவனைக் கொன்ற பாவம் சரியாகிவிடுமல்லவா!” என்று மிகுந்த ஆவலோடு கேட்டார் மன்னர்.
“அவனே உயிரோடு இருக்கும் போது அவனைக் கொன்ற பாவம் எப்படி ஏற்படும்?” என்று சொல்லிக் கொண்டே தன் நீண்ட தாடியையும் சந்நியாசி வேஷத்தையும் கலைத்துவிட்டு, தெனாலிராமனே எதிரில் நின்றான்.
அரசரும் ராஜகுருவும் அவனை உயிரோடு கண்டதும் கல்லாக மரமாக சமைந்து போனார்கள்.சற்று நேரம் அப்படியே திகைத்து நின்றார்கள். உண்மையாகவே நீ தெனாலி ராமன் தானா? என்று இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.
“ஆமாம்! அதிலென்ன சந்தேகம்!” என்று சொல்லி அதுவரை நடந்த செய்திகளனைத்தையும் விவரித்தான்.
‘பலே ஆளடா நீ!’ என்று அரசர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் ராஜகுருவோ ஆழ்ந்த சிந்தனையில் அமிழ்ந்தார்.
அப்பொழுது மறக்காமல், தன்னையும் தன்னை விடுவித்த அந்த இரண்டு சேவகர்களையும் மன்னிக்கும்படி அரசரிடம் கேட்டான் தெனாலிராமன்.
முதலில் ‘சரி’ என்று ஒப்புக் கொண்ட பிறகு இப்பொழுது அரசரால் அதை மாற்ற முடியுமா?
“ஆகா! அப்படியே ஆகட்டும்!” என்றார் அரசர்.உடனே உள்ளே சென்று ஆயிரம் பொன்னையும் தூக்கிக் கொண்டு வந்து தெனாலிராமனிடம் கொடுத்தார். அரசர் பறைசாற்றிய பிறகு, அதைக் கொடுக்காமல் இருக்க முடியுமா?
தெனாலிராமன் ஆயிரம் பொன்னோடு சந்தோஷமாக வீடு திரும்பினான்.