தூத் பேடா செய்வது எப்படி?

தூத் பேடா இந்தியாவில் பிரபலமான இனிப்பு. இந்த இனிப்பு பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது விரும்பப்படுகிறது. பால் அதன் முக்கிய மூலப்பொருள். இந்த தூத் பேடா அனைவராலும் விரும்பப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மூலைக்கடைகளிலும் கிடைக்கும்.

தேவையான பொருள்கள்:

பால்                –   2 லிட்டர்
சீனி                 –   3/4 கிலோ
ஏலப்பொடி          –   1/4 தேக்கரண்டி

செய்முறை:

a) பாலை கட்டியாக காய்ச்சவும்.சீனியில் ஒரு கப் தண்ணிர் சேர்த்து பிசுபிசு என்று இருக்கும் பக்குவத்தில் இளம்பாகு தயார் செய்து அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் பால்,ஏலப்பொடி கலந்து கட்டியாக காய்ச்சி இறக்கவும்.சிறு சிறு மூடியில் ஊற்றி தாம்பளத்தில் கவிழ்த்தி எடுக்கவும்.

b) பாலைக் கெட்டியாக காய்ச்சியதும் சீனியையும் அதனுடன் கலந்து சிறிது காய்ச்சி 100 கிராம் மைதா மாவையும் அதனுடன் கலந்து சிறிது நேரம் கிளறி முன்பு சொன்னபடி அச்சில் வைத்து எடுத்து வைக்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply