தண்ணீர் தொட்டியும் வாஸ்தும்

நம்முடைய இடத்திற்கு அதாவது குடியிருக்கும் வீட்டிற்கு காலிமனைக்கு, தொழிற்சாலைகளுக்கு, விவசாய நிலத்திற்கு எங்கு நீர் நிலைகள் வரவேண்டும். அதாவது தரைக்குக்கீழ் வரக்கூடிய தண்ணீர் தொட்டி, கிணறு, போர் எங்கு வர வேண்டும். அதனால் நமக்கு என்ன நன்மை தீமைகள் பற்றி பார்ப்போம்.

தண்ணீர் தொட்டி வரவேண்டிய பகுதிகள் : நம்முடைய இடத்திற்கு எப்பொழுதுமே தரைக்குக்கீழ் வரக்கூடிய தண்ணீர் தொட்டி அமைப்பும், கிணறு அமைப்பும், போர் அமைப்பும் வடகிழக்கு பகுதியை சார்ந்தே வரவேண்டும்.
தண்ணீர் என்பது எப்பொழுதுமே தாழ்வான பகுதியை நோக்கி செல்லக்கூடியது. நமது இடத்திற்கு வடகிழக்கு எப்பொழுதுமே தாழ்வான பகுதியாக இருப்பது சிறப்பை தரும். தரைக்கு மேல்வரக்கூடிய தண்ணீர் தொட்டி எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில் வீட்டின் கூரை பகுதிக்கு மேல் வருவது சிறப்பை தரக்கூடியது.

தண்ணீர் தொட்டி வரக்கூடாத பகுதிகள் : நமது மொத்த இடத்திற்கு தரைக்குக்கீழ் தண்ணீர் தொட்டி வரக்கூடாத பகுதிகள் :

1. தென் கிழக்கு
2. தென் மேற்கு
3. வட மேற்கு
4. மேற்கு
5. தெற்கு.

இந்த பகுதிகளில் எக்காரணம் கொண்டும் தரைக்குக்கீழ் தண்ணீர் தொட்டி மட்டுமல்ல எந்த ஒரு நீர்நிலை அமைப்பும் வருவது தவறு. இதனால் பல தீமைகளே ஏற்பட வாய்ப்புள்ளது.

நமது மொத்த இடத்திற்கு தரைக்குமேல் வரக்கூடிய தண்ணீர் தொட்டி வரக்கூடாத பகுதிகள் :
1. வடகிழக்கு
2. வடக்கு
3. கிழக்கு
4. தென் கிழக்கு
5. தெற்கு
6. மேற்கு
7. வடமேற்கு

இந்த பகுதிகளில் எக்காரணம் கொண்டும் தரைக்கு மேலும் சரி, கட்டிடத்திற்கு மேலும் சரி தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகளை தவிர்ப்பது சிறப்பை தரும்.

வடகிழக்கு பகுதியில் தரைக்குமேல் வரும் தொட்டி போன்ற அமைப்புகளால் ஏற்படும் பாதிப்பு எப்பொழுதுமே வீட்டின் மூத்த வாரிசு மீதே இருக்கும்.

தென்கிழக்கு பகுதியில் தரைக்கு கீழ் மற்றும் தரைக்குமேல் வரக்கூடிய தண்ணீர் தொட்டி அமைப்பால் வீட்டில் உள்ள அனைவரின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தண்ணீர் என்பது நமது உடலில் இரத்தம் இருப்பது போல் நமது வீட்டிற்கு மிக முக்கியமான பங்கினை வைக்க கூடியது.

அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் சரியான இடத்தில் தண்ணீர் தொட்டியை அமைத்து கொள்வது நன்மையை தரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply