ஜாங்கிரி செய்வது எப்படி?

ஜாங்கிரி எளிதான மற்றும் சுவையான இனிப்பு தின்பண்டங்களில் ஒன்றாகும். இதை வீட்டிலேயே சுவையாகவும் எளிதாகவும் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 3 கோப்பை
அரிசி – 1 தேக்கரண்டி மாவு
புட் கலர் – 1 சிட்டிகை
சர்க்கரை – 3 கோப்பை
ஏலக்காய் – 3
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

1 லிருந்து 2 மணி நேரம் வரை உளுத்தம் பருப்புகளை நீரில் ஊறவைத்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும்.

உளுத்தம்பருப்பை அதிகம் நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவேண்டும். இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்த துணியில் இந்த மாவு கலவையை கொட்டி, முடிந்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் காய வைக்க வேண்டும். எண்ணையை அதிக சூட்டில் கொதிக்க வைத்து, அதில் ஜாங்கிரியை பிழிந்தால் ஜாங்கிரி சரியான பக்குவத்தில் வராது.

இப்போது முடிந்து வைத்திருக்கும் அந்த துணியில் இருக்கும் மாவை, வாணலியில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் மெதுவாக முதலில் ஒரு வட்டமாகவும், பிறகு அதன் மீது வட்ட, வட்டமாக மாவை பிழிய வேண்டும்.

அதிக மொறுமொறுப்பாக ஜாங்கிரியை பொறிக்க விடாமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சப்பட்ட சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி தயார்.

(குறிப்பு): மொறு மொறுப்பாக வேண்டுமானால் பச்சரிசி 40 மி.லி. போடவும். மாவு இளக்கமாக இருந்தால் 1 மேஜைக்கரண்டி மைதா மாவு சேர்க்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply