வாஸ்து படி செப்டிக் டேங்க்

கிராமப்புறங்களில் மக்கள் இயற்கைக் கடன்களை முடிக்க ஊர்ப்புறம் சென்றுவிடுவார்கள். ஆனால் நகரத்தில் அந்த வசதி இல்லை.
எனவே, அவர்கள் தங்களுக்கு உள்ள இடத்திலேயே (வீடு) நீர்த்தொட்டி, செப்டிக் டாங்க் மற்றும் எல்லாவற்றையும் அமைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இவையும் வாஸ்து முறையின்படியேதான் அமைக்க வேண்டும்.
செப்டிக் டேங்க் எப்படி அமைப்பது என்பதை இப்போதுகாண்போம். கீழ்நிலைத் தொட்டி அமைப்பது போன்றே இதையும் அமைக்க வேண்டும். செப்டிக் டேங்க் குழியைக் கிழக்கிலிருந்து வடக்கு வரையிலும் தோண்டலாம். ஆனால் ஈசான்ய மூலையை (அதாவது கோட்டினை) விட்டு விட வேண்டும்.
ஈசான்யக் கோட்டில் செப்டிக் டேங்க்கோ, நீர்த் தொட்டியோ வரக் கூடாது. கழிப்பிடம் கன்னிமூலையில் வைக்கலாம் என்பார்கள் சிலர்.
கழிப்பிடமிருக்கலாம் ஆனால் செப்டிக் டேங்க் இருக்கக்கூடாது. கழிப்பிடமும் உயரமாகத்தான் இருக்க வேண்டும். குழியைத் தென்மேற்குப் பகுதியிலும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளிலும் அமைப்பது தவறு. பல கஷ்டங்ளை ஏற்படுத்தி விடும். செப்டிக் டேங்க் அமைப்புதான் பல வீடுகளிலும் சரிவர அமையாததைக் காணலாம்.
படுக்கை அறையில் கழிவறை அமைத்துக் கொள்வதாகயிருந்தால், அந்த அறையில் வடக்கிலும், கிழக்கிலும் அமைத்துக் கொள்ள வேண்டும். லெட்ரின் பேசின்கள் மட்டும் (கால்கள்) வடக்கு தெற்காக அமைக்க வேண்டும். அதை உபயோகப்படுத்துவோர் முகம் வடக்காகவோ அல்லது தெற்காகவோ இருக்க வேண்டும். குறிப்பாக தெற்குத் திசை நோக்கி உட்கார்ந்தால் சிறப்பானது.
கிழக்குத் திசை, மேற்குத் திசை நோக்கி உட்காரக் கூடாது. செப்டிக் டாங்கிற்கும், குடிநீர்த் தொட்டிக்கும் தகுந்த இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். இல்லையெனில் குடிநீருக்குப் பாதிப்பு ஏற்படும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply