கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு வைத்து சாப்பிட்டால் பித்ததிற்கு நல்லது. பெண்களுக்கு முடி நன்கு வளரும். குழந்தை பிறந்த காலத்தில் தாய்மார்களுக்கு கறிவேப்பிலை குழம்பு நல்லது.

தேவையான பொருட்கள் :

பூண்டு, வெந்தயம், சோம்பு
நல்ல எண்ணெய்
கடுகு
தக்காளி
மஞ்சள்தூள்
உப்பு
மிளகாய் தூள்
கறிவேப்பிலை
புளி தண்ணீர்

செய்முறை:

கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலை குழம்பு

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சோம்பு மற்றும் வெந்தையம் போட்டு பொரிந்த உடன் நருக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.

வதைக்கிகொண்டுருக்கும்போதே உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். 5 நிமிடம் ஆனபின் மிக்சியில் நன்கு அரைத்த தக்காளி மற்றும் கருவேப்பில்லையை சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து புளி தண்ணீரை அதனுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் மதிய உணவிற்கும் பரிமாறலாம்.

இப்போது அமேசானில் வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இங்கே கிளிக் செய்யவும்…

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply