நாம் அனைவரும் விரும்பும் அசைவ உணவுகளில் சிக்கன் பிரியாணியும் ஒன்று. இந்த பதிவில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எப்படி எளிதாக சமைப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை :
பிரியாணி அரிசி – 1/4 படி
சிக்கன் கறி – 250 கிராம்
தேங்காய் – 1/2 மூடி பால் எடுக்கவும்
இஞ்சி – 3 அங்குலம் அரைப்பதற்கு
பூண்டு – 1
நெய்யில் வறுத்த பட்டை – 1 அங்குலம்
கிராம்பு – 6
கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (வறுத்தது)
புதினா, கொத்தமல்லி தழை
பெல்லாரி – 2
மிளகாய் – 6
ஏலக்காய் – 6
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை :
அரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய சிக்கன் கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 1/3 படி நீர் சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரித்த வெங்காயம் புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை வெயிட் வைத்து மூடி 10 நிமிடத்தில் இறக்கவும்.
இதையும் செய்யலாமே!: ஜாங்கிரி செய்வது எப்படி!