சாக்லேட் செய்வது எப்படி!!

சாக்லேட் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? குழந்தைகளுக்கு மட்டும் இல்ல பெரியவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இனிப்புனவே முதல்ல சாக்லேட் தான் யாபகம் வரும். பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். அதனாலே நாமளும் சாக்லேட் செய்வோமா..!!

தேவையான பொருள்கள் :

அமுல் மில்க் பவுடர்         –   160 கிராம்  (அல்லது) 15 மேஜைக்கரண்டி

கொக்கோ பவுடர்               –    30 கிராம்  (அல்லது)  3 மேஜைக்கரண்டி

வெண்ணெய்                    –    2 மேஜைக்கரண்டி

சீனி                                  –    170  கிராம்  (அல்லது)   9 மேஜைக்கரண்டி

தண்ணீர்                          –      1 1/2 கப்

வெனிலா  எசன்ஸ்         –     1/4 தேக்கரண்டி

செய்முறை :

சீனியையும் ,தண்ணீரையும் ஒரு வாணலியில் கலந்து அடுப்பில் வைத்துக் கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சவும் .பால் பவுடரையும்,கொக்கோ பவுடரையும் ஒன்றாக கலந்து கட்டியில்லாமல் சலித்து கொள்ளவும்.

சீனிப்பாகு தயாரானதும் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி வெண்ணெய்பாகுடன் சேர்க்கவும்.

வெண்ணெய் உருகியதும் வெனிலா எசன்ஸ் ஊற்றவும்.சலித்து வைத்துள்ள பால் பவுடரையும், கொக்கோ பவுடரையும் போட்டு நன்றாக கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டவும்.ஆறிய பின் சதுரங்களாக வெட்டவும் அல்லது கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு கோலியளவு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply