வாஸ்து முறைப்படி சமையல் அறை

வீட்டின் மிகமிக இன்றியமையாத பகுதிகளுள் ஒன்று சமையலறை. ஓரறை கொண்ட வீடெனின் அது சமையலறையாகத்தான் பெரும்பாலும் இருக்கும். நம் நாட்டின் உணவு வகைகளை ஆராய்ந்தால் இயற்கை உணவிலிருந்து நாம் வெகு தொலைவு வந்து விட்டோம் என்பதும், நம் வீட்டுப் பெண்கள் நாளின் பெரும் பொழுதைச் சமையலறையிலேயே கழிக்க வேண்டியுள்ளது என்பதும் தெளிவாகும்.

இவ்வுண்மைகள் விரும்பத் தக்கனவல்ல என்றாலும், இந்நிலை மாறும் வரை நமது சமையலறை, இந்நிலைகளைக் கருத்திற் கொண்டே வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை, வீடு கட்டுவோர் மறவாமல் நினைவில் நிருத்த வேண்டும்.

கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரும் ஏற்ற வடிவமைப்பைக் செய்து தரும் போது சமைப்பதற்குரிய பாத்திரங்கள், அடுப்பு, எரிபொருள், முறை ஆகிய பலவகையிலும் நாடோறும் தோன்றிவரும் வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

மனையடி நூலும், வாஸ்து சாத்திரமும் அன்றைய நிலைமைகளுக்கேற்ப எழுதப்பட்டிருப்பினும், சமையல் கலை அன்றும் பெண்களே பெரும்பாலும் செய்து வந்தமையால், சமையலறை பெண்களுக்குப் பெரும் பயன் அளிக்கவல்ல திசையாகிய தென்கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

1 . தென்கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். இயலாவிடின் வடமேற்க்கு பகுதியில் அமைக்கலாம்.(இங்கு சமையலறை இருப்பின் விருந்தினர் பெருமளவில் வருவதாக நம்பப்படுகிறது.)

2 . தென்கிழக்கு, வடமேற்க்கு ஆகிய எத்திசையில் சமையலறை அமைப்பினும், அடுப்பு அந்த அறையின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். சுவரை ஒட்டாமல் சிறிது தள்ளி இருத்தல் நல்லது.

3 . கிழக்கு அல்லது தெற்குச் சுவரைச் சார்ந்தாற்போல் இருக்க வேண்டும். ஆனால் சுவரிலிருந்து ஒரங்குலமாவது தள்ளி, சுவரோடு ஒட்டாமல் இருத்தல் நல்லது. சமைப்பவர் கிழக்கு நோக்கிச் சமைக்க வேண்டும். இதற்கேற்றவாறு மேடை இருக்க வேண்டும்.

4 . தெற்குச் சுவரை ஒட்டி வைக்க வேண்டும். சமையல் மேடைபோல் ஒரு மேடை இங்கும் கட்டி, மேடையின் மேல் இவைகளை வைக்கலாம்.

5 . குளிசாதன பெட்டி தெ, மே, வ ஆகுய திசைளில் வைக்கலாம். தென்மேற்க்கு மூலையில் வைப்பின் சுவரிலிருந்து ஒரடி இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.

6 . கழிவு நீர் தொட்டி வடகிழக்குப் பகுதியிலோ, அம் மூலையிலோ இருக்க வேண்டும்.

7 . வட கிழக்கு அல்லது வடக்குப் பகுதியில் குடிநீர்ப் பாத்திரங்கள் இருக்க வேண்டும்.

8 . சமையற் பொருட்கள், தானியங்கள் தெற்கு அல்லது மேற்குப் பகுதியில் இருக்க வேண்டும்.

9 . உணவு மேசை சமையலறைக்குள்ளேயே வேண்டின், இம்மேசை மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் போடலாம்.

10 . சுவர்களுக்கு ஆரஞ்சு, சாக்லேட், இளஞ்சிவப்பு, ஆகிய வண்ணங்கள் தீட்டலாம். தளத்திலும், சுவரிலும் இவ்வண்ண ஒடுகள் பதிக்கலாம்.

11 . வீட்டின் வெளியே சமையல் அறை தெற்குப் பக்கம் உள்ள திறந்த வெளியில் தெற்குச் சுற்றுச் சுவரை ஒட்டி, கிழக்குச் சுற்றுச் சுவரிலிருந்து சிறிது தள்ளி, தெ.கி மூலையில் கட்ட்லாம். அல்லது மேற்குச் சுற்றுச் சுவரை ஒட்டி, வடக்குச் சுற்றுச் சுவரிலிருந்து சிறிது தள்ளி வ.மே மூலையில் அமைக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply