வாஸ்து முறைப்படி சமையல் அறை

வீட்டில் சமையல் அறையை அக்கினி பகவான் மூலையான தென்-கிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். சமையல் அறை அமைபதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதி. இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எக்காரணம் கொண்டும் ஈசான்ய மூலையான வடகிழக்கு மூலையில் சமையல் அறையை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைப்பது வீட்டில் உள்ள செல்வத்தை எரிபதற்குச்சமம்.

இதனால் வறுமை வீட்டை ஆட்டி படைக்கும் நம் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான உணவு தயாரிக்கபடும் இடம் என்பதால் வாஸ்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது அடுப்பை சமையல் அறையின் தென் கிழக்கு மூலையில் வைக்க வேண்டும்.

சமைக்கும்போது சமைப்பவர் கிழக்கு நோக்கி நின்று சமைக்குமாறு சமையல் அறையை அமைக்க வேண்டும். அடுப்பு வைக்கும் இடத்தை கூடு போல் அமைத்துக்கொள்ளக் கூடாது. சமைபவரின் வலது புறத்தில் பாத்திரம் கழுவும் தொட்டியை வைக்க வேண்டும். தெற்கு, மேற்கு சுவரில் பரண், கபோடு அமைக்க வேண்டும்.

எட்டு திசைகளில் சமையல் அறை அமைவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் கிழக்கு : வம்ச விருத்தி, குடும்பத் தலைவியின் உடல் நலம் பாதிக்க படும்.

தென் கிழக்கு : உணவில் சுவை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எந்தத் தடைமின்றி சுபமாக நடந்தேறும். செல்வம் பெருகும்.

தெற்கு : வருமானத்தைவிட செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் தொல்லை இருக்கும்.

தென் மேற்கு : நோய்கள், மனக்குழபங்கள் ஏற்படும். உணவு உடனே கெட்டு போகும்.

மேற்கு : குடும்பத்தில் நிம்மதி இருக்காது. சண்டைச் சச்சரவுகள் வரும்.

வடமேற்கு : வீண் செலவுகள் ஏற்படும். வடக்கு : குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி பிரச்சினை வரும்.

வடகிழக்கு : இங்கு சமையலறையை எக்காரணம் கொண்டும் அமைக்கக் கூடாது. இதனால் நிறைய தீய பலன்கள் உண்டாகும்.

சமையலறையில் குளிர்சாதன பெட்டியை வடமேற்கு மூலையிலும், மாவாட்டும் எந்திரத்தை தென்மேற்கு மூலையிலும் வைக்க வேண்டும். சமையலறைக்கு அடுத்து படுக்கை அறையிருந்தால் இரண்டு அறைகளைம் பிரிக்கும் சுவர் கனமாக இருக்க வேண்டும்.

சாப்பிடும்போது வடக்கு, கிழக்கு நோக்கி அமர்ந்து உணவு சாபிடுவதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply