கேரட் மற்றும் பீட்ரூட் கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும், இது குளிர்ந்த குளிர்கால இரவுகளில் உங்களை சூடாக வைத்திருக்கும். இந்த கீர் ரெசிபி கேரட் மற்றும் பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான செய்முறை, இது கிட்டி விருந்துகள் மற்றும் ஆண்டு விழாக்களுக்கு ஒரு சிறந்த வழி. இந்த எளிதான மற்றும் விரைவான பசியின்மை செய்முறையை முயற்சிக்கவும்!

தேவையான பொருள்கள் :

கேரட் – 1/2 கிலோ  அல்லது  பீட்ருட் –  1/2 கிலோ
சீனி – 1/2 கிலோ (இனிப்பு தேவைக்கேற்ப )
முந்திரி பருப்பு – 100 கிராம்
பிஸ்தா பருப்பு, சாரை பருப்பு – தேவைக்கேற்ப
பால் – 2 லிட்டர்
பாதாம் எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி

செய்முறை :

கேரட்டை துருவி கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும். குக்கரில் தனித்தனி பாத்திரத்தில் முந்திரிபருப்பையும் துருவிய கேரட்டையும் சிறிது தண்ணீர் விட்டு ஆவியில் வேக வைக்கவும்.

விசில் வந்ததும் 5 நிமிடம் கழித்து திறந்து அதில் உள்ள நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும். பின்பு மிக்ஸியில் இரண்டையும் சேர்த்து வெண்ணெய் போல் அரைக்கவும். தேவைபட்டால் வடிகட்டிய நீரை சேர்த்து கொள்ளவும்.

கேரட் கீர் அல்லது பீட்ரூட் கீர்
கேரட் கீர் அல்லது பீட்ரூட் கீர் செய்வது எப்படி?

அரைத்த கேரட்டை வடிகட்டிய நீரில் கரைத்து சீனியையும் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கும் சமயம் நன்றாக கொதித்த பாலையும் சேர்த்து நெய்யில் வறுத்த பிஸ்தா, சாரை பருப்பு சேர்த்து பாதாம் எசென்ஸ் விட்டு இறக்கவும். சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

இதையும் செய்யலாமே!: முந்திரி பருப்பு கேக் செய்வது எப்படி!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply