கிரகப்பிரவேசம் செய்யும் நாட்கள்

இதுவரை வீடு கட்டுவதற்கான நேரங்களைப் பற்றியும், சாஸ்திர விதிமுறைகள் பற்றியும் எழுதியுள்ளேன். இனி இந்த வீட்டிற்கு எப்பொழுது குடி செல்லலாம் கிரஹப்பிரவேசம் செய்யலாம் என்று  இதில் விவரித்துள்ளேன்.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய இந்த நான்கு மாதங்களும்  ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகளும், பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி, சதுர்த்தி, பெளர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளும் புது இல்லத்திற்கு கிரஹப்பிரவேசம் செய்ய தவிர்க்கப்பட வேண்டியவையாகும் . இரவு நேரம் தவிர்க்கப்பட வேண்டும்.

மகரம் முதல் ஆறு ராசிகளில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதங்கள் கிரஹப்பிரவேசத்திற்கு சிறந்தவை. இதில் மாசி விலக்க வேண்டும், ஆனி மாதம் விலக்க வேண்டும் என்பதும் ஒரு சிலரின் கருத்து. ஆனால் மாசி மாதம் கிரஹப்பிரவேசம் செய்வது நல்ல பலன்களையே தருகின்றது என்பது என் கூற்றாகும்.

ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி எனும் நட்சத்திரங்கள் கிரஹப்பிரவேசத்திற்கு ஏற்றவை.

புது இல்லத்தில் புகும் போது குரு, சுக்கிர அஸ்தமனம் இருக்கக் கூடாது.

காலை நேரத்தில் வளர்பிறை முகூர்த்தத்தில் கிரஹப்பிரவேசம் செய்வது அனைத்து நலனையும் தரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply