காரா பூந்தி செய்வது எப்படி!!

காரா பூந்தி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும். குறைந்த நேரத்தில் வீட்டிலேயே சுவையாக தயாரிக்கலாம்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1/4 கிலோ
முந்திரி பருப்பு – 50 கிராம்
பச்சரிசி மாவு – 50 கிராம்
வற்றல் தூள் ,உப்பு தூள்  – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு (சுடுவதற்கு )

செய்முறை: 

இரண்டு மாவையும் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்எண்ணெயின் மேல் பெரிய கண்கரண்டியை பிடித்து கொண்டு ஒரு கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து விடவும்.மாவு மேலே மேலேவிழாமல்  கண்கரண்டியை எடுத்து விட வேண்டும்.

காரா பூந்தி எண்ணெய்க்குமேலே மிதந்து வந்ததும், அரித்து எடுத்து கண் தட்டில் வடிய வைக்கவும்.இதே போல் மீதி மாவையும் சுட்டு எடுக்கவும்.

வற்றல் தூள், உப்பு தூள் கலந்து ஒருதேக்கரண்டி நெய்யில் பாதியாக ஒடித்த முந்திரி பருப்பு, கருவேப்பில்லை வறுத்து போடவும். கரைத்து வைத்துள்ள மாவில் தேவையான  வற்றல் தூள், உப்பு தூள் கலந்தும் மேலே கூறியப்படி சுடலாம்.

இதையும் செய்யலாமே!: மைதா மாவு பூந்தி செய்வது எப்படி!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply