கழிவுநீர் தொட்டியை வாஸ்து சாஸ்திரப்படி எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.
கழிப்பறையில் அன்றாடம் வெளியேறும் கழிவுகளை குழாய் வழியாக தனியாக தொட்டி அமைத்து அந்த தொட்டிக்குள் நிரப்பவேண்டும். இந்த தொட்டியை வாஸ்து முறைப்படி அமைக்க நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை உருவாக்கிவைத்துள்ளனர்.
அத்தகைய கழிவுகளை வைத்திருக்கும் தொட்டி (செப்டிக் டேங்க்) கழிவு நீர் தேக்க தொட்டியாகும்.
செப்டிக் டேங்க் அமைக்கும் முறை:-
ஒரு இடத்தில் கட்டப்படும் கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் வடமேற்கு-வடக்கு பகுதியில் வைக்க வேண்டும்.
ஒரு இடத்தில் கட்டப்படும் கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் தாய்ச்சுவர் மற்றும் சுவரை தொடாமல் வைக்க வேண்டும்.
ஒரு இடத்தின் வடமேற்கு-வடக்கு சுவரைத் தொடாமல் வடக்குச் சுவருக்கு வெளியே வடிகால் அமைக்கலாம்.
அந்த இடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கில் கழிவுநீர் தொட்டி கட்டக்கூடாது.
கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்கிற்கு வரும் கழிவுநீரில் உள்ள அடைப்பை சரிசெய்ய தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் சிறிய தொட்டி (சேம்பர்) கட்டக்கூடாது.
இதையும் படிக்கலாமே!: வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?
கழிவுநீர் தொட்டியை எப்படி அமைப்பது, கழிவுநீர் தொட்டி, வாஸ்து படி கழிவுநீர் தொட்டி, குளிக்கும் தண்ணீர் செல்லும் வழி,
இதையும் படிக்கலாமே!: வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?