இன்றைய நவீன உலகில் எத்தனை புதிய வகை மிட்டாய்கள், சாக்லேட்டுகள் வந்தாலும், கமர்கட், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்ற 90″ஸ் கிட்ஸ்களின் ருசிக்கு ஈடாகாது.
தேவையான பொருட்கள் :
மண்டைவெல்லம் [அல்லது ] அச்சு வெள்ளம் – 1/2 கிலோ –
தேங்காய் – 1/2 மூடி [பூவாக துருவி வைக்கவும் ]
ஏலக்காய் – 6 [வாசனைக்கேற்ப ] தூள் செய்துக்கொள்ளவும்
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய் வதக்கும்போது ஒரு வாசம் வரும்.
தேங்காய் வதங்கும் வாசம் வரும் வரை வதக்கி கொண்டால் போதும். வதக்கிய தேங்காயை அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக வெல்லத்தை பாகு எடுக்க வேண்டும். இந்த கமர்கட்டு செய்வதற்கு வெல்லத்தை சரியான பக்குவத்தில் பாகு எடுக்க வேண்டும்.
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் அளவு தண்ணீரில், 1 1/2 கப் அளவு வெல்லத்தை சேர்த்து, நன்றாக கரைத்து இந்த வெல்லத்தை வடிகட்டி, அடிகனமான கடாயில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீரில் கரைத்து வடி கட்டின இந்த வெல்லத்தை கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்கட்டும். வெல்லம் நன்றாக கொதித்து நுரைத்து பொங்கி கட்டி பதத்திற்கு வரும்.
இந்த வெல்லம் ஒரு கம்பி பதம் பாகு வந்த பிறகு, இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த வெல்ல கரைசலை கொஞ்சமாக சேர்த்து உங்களுடைய கையில் எடுத்தால் அந்த வெல்லம் கட்டி தன்மையாக வேண்டும்.
அந்த சமயத்தில் வதக்கி வைத்திருக்கும் தேங்காயை, வெல்லம் பாகுடன் சேர்த்து நன்றாக கிளறி கொடுங்கள். இந்த இடத்தில் தேவைப்பட்டால் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடியை தூவி கொடுங்கள்.
வெல்லமும் துருவிய தேங்காயையும் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாகக் கிளறி கொடுத்துவிட்டு, இதை அப்படியே உடனடியாக ஒரு தட்டில் கொட்டி விடுங்கள்.
இது கை பொறுக்கும் சூடு வந்தவுடன், சூடு ஆறுவதற்குள், சிறு சிறு உருண்டைகளாக அழுத்தம் கொடுத்து பிடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் கையில் லேசாக தண்ணீரைத் தொட்டுக்கொண்டு பார்த்து பக்குவமாக உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள்.
சூடான வெள்ளத்தில் கையை தொட்டு விட்டால் கையில் கொப்பளம் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஒருவேளை நீங்கள் உருண்டை பிடிப்பதற்குள் இந்த பாகு இறுகி தட்டில் ஒட்டிக் கொண்டால், அந்த தட்டை லேசாக மீண்டும் நெருப்பில் காட்டினீர்கள் என்றால், கமரகட்டு மீண்டும் உருகி வரும்.
அதை எடுத்து மீண்டும் உருண்டை பிடித்துக் கொள்ளலாம். இந்த உருண்டைகளை காய்ந்த சில்வர் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரத்திற்கு கூட வைத்து சாப்பிடலாம்.
இதையும் செய்யலாமே!: சாக்லேட் செய்வது எப்படி!