கடலை மாவு லட்டு செய்வது எப்படி!!

சுவையான, இனிப்பான லட்டு இந்தியாவில் அனைத்து பண்டிகைகளின் போதும் விரும்பப்படும் இனிப்பு. இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 4 கப்
பசும்பால் – இரண்டரை கப்
நெய் – இரண்டரை கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 2 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை – சிறிதளவு

செய்முறை:

நெய்யை உருக்கி கடலை மாவில் சேர்க்கவும்.

பாலையும் காய்ச்சி கடலை மாவில் விட்டு நன்கு கலக்கவும்.

கடலை மாவை தளர்த்தியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

பின்னர் ஒரு பெரிய ஜல்லடையில் மாவைக் கொட்டி சலிக்கவும்.

இப்போது வரும் பூந்திகளை வாணலியில் நெய் விட்டு அதில் போடவும்.

சர்க்கரை அரைத்து வாணலியில் சேர்க்கவும்.

ஏலக்காய், திராட்சை ஆகியவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி சூடாக இருக்கும்போதே லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்.

இதையும் செய்யலாமே!: ரவை பணியாரம் செய்வது எப்படி!!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply