அலுவலகத்தில் பண அறை

பணம்! பணம்! மனிதன் அதைத் தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறான். மனிதன் தான் பணத்தைப் படைத்தான்.

ஆனால் பணம்தான் இன்று ஒருவனை வல்லவனாகவும், நல்லவனாகவும் புகழுடையவனாகவும் ஆக்குகிறது.

‘பணம் பத்தும் செய்யும்!’

‘ஏழையின் சொல் அம்பலன் ஏறாது!’

‘காசேதான் கடவுளடா!’ என்றெல்லாம் பணத்தின் பெருமையைப்பற்றி அறிவீர்கள்.

செல்வ நிலையில் முன்னேற்ற மடைந்தால் தான் ஒருவனை அவன் குடும்பத்தார்கூட மதிக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

மற்ற எந்த முன்னேற்றங்களையும் ஒருவரும் புரிந்து கொள்வதில்லை.

அப்படிப்பட்ட செல்வத்தைச் சம்பாதிப்பதிலும், பாதுகாத்து வைப்பதிலும் மிகுந்த கவனம் தேவையல்லவா? நமது வீட்டில் கஜானா அல்லது பணப்பெட்டி வைக்கும் இடம்தான் பணத்தின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் கொடுத்து விடுகிறது.

வீட்டின் வடக்கில் உள்ள அறையில் தென்மேற்கு, மேற்கு, தெற்குத் திசைகளில் பணப்பெட்டி (cash box) யை வைக்க வேண்டும்.

பண அலமாரியை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். பணப்புழக்கம், பணவரவு அதிகரிக்கும்.

வீட்டின் அல்லது அறையின் ஈசான்ய மூலையிலும், அக்னி மூலையிலும் பணப்பெட்டி வைக்கக்கூடாது. பணம் தங்காது. செலவுகள் கட்டுக்கடங்காமலிருக்கும்.

வீட்டின் தென்மேற்கு (கன்னி) அறையின் தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு வைத்தால் நகையும், பணமும் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும். இங்கு வைத்தால் பணம் நிறைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே!: வீட்டில் பணம் சேர்க்க முடியவில்லை?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply