முகத்தில் கரும்புள்ளி மறைய சில குறிப்புகள்

முகத்தின் நிறம் சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் அழகு குறைவதில்லை. ஆனால் முகத்தில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட அழகைக் கெடுத்துவிடும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தய கீரை :

வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

தயிருடன் எலுமிச்சை :

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

உப்பு

உப்பினை நீரில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.

பருக்களால் வந்த கரும்புள்ளிகள் தழும்புகளை மறைக்க உப்பு சிறந்த பொருள். பருக்கள் உடைந்து மற்ற இடங்களில் பட்டால் பருக்கள் மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பிக்கும்.

உப்பு பருக்களில் உள்ள கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது.

பூண்டு

நம் அன்றாட உணவுகளில் சேர்க்கும் பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. குறிப்பாக பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க பெரிதும் உதவும்.

பூண்டினை அரைத்து பேஸ்ட் செய்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.

முகத்தில் கரும்புள்ளி மறைய சில குறிப்புகள்

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் குறைவதோடு கரும்புள்ளிகளும் நீங்கும்.

அதிலும் முட்டையின் வெள்ளைக் கருவையும் எலுமிச்சை பழ சாற்றினையும் சேர்த்து தடவினால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.

இது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை சிறப்பாக போக்கும்.

வேப்பம் இலை

வேப்பிலை சிறப்பான மூலிகை இது சருமத்தை சுத்தம் செய்வதோடு சருமத்தை தாக்கும் கிருமிகளிடம் இருந்தும் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் கழுவதன் மூலம் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

கற்றாளை

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த கற்றாளை சாற்றினை இரவில் முகத்தில் தடவி ஊற வைத்து காலையில் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சரும தொற்றுக்கள் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply