தெனாலிராமன் சிறுகதை - சமயம் வாய்த்தது

எத்தனை நாட்கள்தான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பான் தெனாலிராமன். மேலும் வருமானம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவது? ஆழ்ந்த யோசனையல் வாழ்ந்தான்.

ஒருநாள் தன் மனைவியையும் தாயையும் அரண்மனைக்கு அனுப்பி அரசனிடம் முறையிடச் சொன்னான்.

அவ்வண்ணமே, அவர்கள் ஒருநாள் அரண்மனைகுச் சென்றார்கள். கண்ணீரும் கம்பலையுமாக இருவரும் அரசன் முன்பாக நின்றார்கள்.

“நீங்கள் யார்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று அரசன் பரிவுடன் கேட்டான்.

“அரசே! ஏதோ ஒரு சிறு குற்றம் செய்ததற்காக இப்படி ஒரே மகன் தெனாலிராமனின் தலையை வாங்கச் சொல்லி விட்டீகளே! இனிமேல் என்னைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?” என்று முதலில் தாய் கதறினாள்.

பிறகு, அரசே! இந்த இளம் பாலகன் முகத்தைப் பாருங்கள்!” என்று தன் இடுப்பிலிருந்த தன் பையனைக் காட்டி அழுதாள் மனைவி மங்கம்மாள்.

எங்களை இப்படி  நடுத் தெருவில் விட்டு விட்டுப் போய்விட்டாரே! நாங்கள் என்ன செய்வோம்! என்று இருவரும் மார்பிலும் தலையிலுமாக அடித்துக் கொண்டார்கள்.

அந்த அபலையின்  கண்ணீர், அரசனுடைய மனதைக் கரைத்து. “நடந்தது நடந்து போய்விட்டது. அதற்காக இப்பொழுது வருந்துவதால் என்ன பயன்? மாண்டவர் மீள்வரோ?” என்று அவர்களைத் தேற்றினார் அரசர்.

“அரசே! ஆதரவிழந்த நாங்கள் எப்படி உயிர் வாழ்வது? தயவு செய்து எங்கள் தலையையும் வாங்கிவிட ஏற்பாடு செய்யுங்கள்! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்” என்று இருவரும் கெஞ்சினார்கள். கண்ணீர் விட்டு அழுதார்கள்.

மன்னர் மனம் கரைந்து. “சரி, இனிமேல் உங்களுக்கு மாதா மாதம் இருவது பொன் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். அதை வைத்துக் கொண்டு பிழைத்துப் போங்கள்” என்றார். அவர்களும் ஒருவாறு தேறி வீடு திரும்பினார்கள்.

நடந்தவற்றை தெனாலிராமனிடம் சொல்லி, இருவரும் ஓரளவு சந்தோஷப்பட்டு கொண்டார்கள்.

“அப்படியென்றால் அன்று அந்த சேவகர்களுக்கு கொடுத்த தொகை, நமக்கு ஒரு மாதத்திலேயே திரும்பக் கிடைத்து விட்டதே! எல்லாம் மகா காளியின் அருள்தான்!” என்று தெனாலிராமனும் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

தெனாலிராமன் கொலையுண்ட செய்தி ஊர் முழுவது காட்டு தீ போல் பரவிட்டது. “இப்படியும் உண்டா! எங்கேயாகிலும் இப்படி ஓர் அந்தணனைக் கொல்வார்களா? அதனால் நம் அரசுக்கு என்ன தீங்கு நேரப் போகிறதோ? என்று ஊரில் ஒருவர்க்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

இந்தச் செய்தி, அரண்மனை அந்தபுரத்திலிருந்த அரசிகள் காதுகளுக்கும் எட்டியது.

அது கேட்ட அவர்கள் பயந்தே போனார்கள். உடனே தெனாலிராமன் ஆத்ம சாந்திக்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்று அரசனிடம் முறையிட்டுக் கொண்டார்கள்.

அது கேட்ட அரசரும் ஆழ்ந்த யோசனையிலாழலானார். நாம் இப்படி அவன் தலையை வாங்க அவசரப்பட்டிருக்க கூடாது என்றே எண்ணினார்.

உடனே ராஜகுருவை கூப்பிட்டனுப்பினார்.

“அகால மரணத்தினால் தெனாலிராமனுடைய ஆத்மா அலைந்து கொண்டிருக்கும்.அதனால் நாளைய அமாவாசை நள்ளிரவில், மயானத்திலிள்ள ஆலமரத்தனடியில் அவன் ஆத்ம சந்திக்கு பெரிய அளவில் பூஜையொன்று செய்துவிடுங்கள். அதற்கான திறவியத்தை இப்பொழுதே கஜானவிலிருந்து பெற்றுச் சென்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.

ஒளிந்தான் தெனாலிராமன் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த ராஜகுருவுக்கு இப்படி ஒரு கட்டளையா!

“அமாவாசை நள்ளிரவிலா செய்யச் சொல்லுகிறீர்கள்?” என்று சற்று தயங்கினார் ராஜகுரு.

“ஏன் அப்பொழுதுதான் செய்ய வெண்டும். அதையும் மயானத்தில் செய்தால் மிகவும் ஏற்புடையதாகும். வேண்டுமென்றால் உதவிக்கு அரண்மனைப் புரோகிதர்களையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள்” என்றார் மன்னர்.

“சரி அப்படியே ஆகட்டும்” என்று அதற்கு ஒப்புக் கொண்டாரேயொழிய, ராஜகுருவுக்கு உள்ளூர சங்கடமாகத்தான் இருந்தது.

நடுராத்திரியில் மயானத்துக்குப்  போக யாருக்குத்தான் தைரியம்மிருக்கும்.

தெனாலிராமன் உயிரோடு இருந்தபோதுதான் தொல்லை என்றால் இப்பொழுது இறந்து போயும் உபத்திரம் நம்மை விட்டு போகாது போலிருக்கிறதே! என்று வெகுவாகச் சலித்துக் கொண்டார் ராஜகுரு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply