அபசகுனம் - அக்பர் பீர்பால் கதைகள்

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் கண்விழித்து விநாயகர் படத்தை பார்ப்பது வழக்கம். ஒரு நாள் அக்பரின் அறையினுள் எதிர்பாராமல் சிப்பாய் ஒருவர் நுழைந்துவிட்டார். அக்பர் அந்த சிப்பாயின் முகத்தில் விழித்து விட்டார்.

அக்பருக்கு, சிப்பாயின் முகத்தில் விழித்த நாள் முழுவதும் பலபிரச்சனைகள் வந்தன. தான் அந்த சிப்பாயின் முகத்தில் விழித்தது தான் இதற்குக்காரணம் என நினைத்து அந்தச் சிப்பாயைத் தூக்கில் போடுங்கள் என உத்தரவிட்டார்.

பீர்பாலுக்கு விஷயம் தெரிந்து, மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு இந்த சிப்பாயின் முகத்தில் விழித்ததால் இன்று நாள் முழுவதும் எனக்கு ஏகப்பட்டபிரச்சனை ஏற்பட்டது. இந்த சிப்பாயின் முகம் மிகவும் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக சிரித்தார். அக்பர் ஏன் சிரிக்கிறாய்? என்று பீர்பாலிடம் கோபமாக கேட்டார்.

அதற்கு பீர்பால் நீங்கள் அவனுடையமுகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே, அப்போ யாருடையமுகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன் என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த சிப்பாயை விடுதலை செய்தார்.

பிரச்சனைக்கு சகுனம் மட்டுமே காரணம் கிடையாது என்பதை தெளிவாக உணர்த்திய பீர்பாலை பாராடினார் அக்பர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply